ஷாமுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் நாயகி!

ஷாமுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் நாயகி!

செய்திகள் 17-May-2016 11:52 AM IST VRC கருத்துக்கள்

ஷாம் நடித்திருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்டத்தை தொடர்ந்து ‘காவியன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் ஷாம்! ‘2MM சினிமாஸ்’ பேனரில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பார்த்தசாரதி இயக்குகிறார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஒருவர் சிவகார்த்திகேயனுடன் ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் நடித்த ஆத்மியா, இன்னொருவர் வர் ஸ்ரீதேவி குமார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் துவங்கி சென்னை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் வில்லானாக நடிக்கவிருக்கிறார். அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். ரோடு டிராவலர் மூவியாக உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவை என்.எஸ்.ராஜேஷ் குமார் கவனிக்க, ஷாம் மோகன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;