போலீஸாகிறார் சிம்ஹா : மீண்டும் ‘கோ2’ கூட்டணி!

போலீஸாகிறார் சிம்ஹா : மீண்டும் ‘கோ2’ கூட்டணி!

செய்திகள் 17-May-2016 11:39 AM IST Chandru கருத்துக்கள்

‘கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் 2ஆம் பாகத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம். ‘கோ2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பாலசரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் 3 நாட்களில் தமிழகமெங்கும் நாலரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் சரத் இயக்கிய இந்த பொலிடிக்கல் த்ரில்லர் தமிழக தேர்தல் சமயத்தில் வெளிவந்ததும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, சரத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் கேரக்டரில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்


;