ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெற்றிப் பெற்ற 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தை தொடர்ந்து, இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. இப்படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஸ்டீஃபன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான கதாநாயகி மற்றும் தலைப்பு தேர்வு நடைப் பெற்று வருவதாக தயாரிப்பாளர் ஸ்டீஃபன் தெரிவித்தார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பென்சில்' ரசிகர்களிட்ம் பரவலான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன அசராதவன்’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, ஜி.வி.யும், ஆதிக்கும் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...