சினிமா காட்சிகள் ரத்து!

சினிமா காட்சிகள் ரத்து!

செய்திகள் 14-May-2016 3:29 PM IST VRC கருத்துக்கள்

நாளை மறுநாள் (மே-16) நடக்கவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கு உரிமையை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சினிமா துறையில் இருப்பவர்களும் அமல்படுத்த முன் வந்துள்ளனர். அதன் படி மே-16 தேதி தமிழகத்திலுள்ள சினிமா தியேட்டர்களில் மாலை 6 மணி வரையிலான காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர சினிமா துறையில் பணியாற்றும் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மே-16 அன்று நடக்கவிருந்த அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;