விக்ரம் பிரபுவுக்காக ‘தாறுமாறு’ பாடிய சிம்பு!

விக்ரம் பிரபுவுக்காக ‘தாறுமாறு’ பாடிய சிம்பு!

செய்திகள் 14-May-2016 3:13 PM IST Top 10 கருத்துக்கள்

கணேஷ் விநாயக் இயக்கி வரும் படம் ‘வீரசிவாஜி’. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடியாக நடிக்கிறார்கள். டி.இமான் இசை அமைக்கும் இப்படத்திற்காக ‘தாறு மாறு…’ என்று துவங்கும் பாடலை பாடியிருக்கிறார் சிம்பு. ஏற்கெனவே சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த ‘வாலு’ படத்தில் இதுபோன்று ‘தாறு மாறு…’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. இப்பாடலை சிம்புவுக்காக அவரது தந்தை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது ‘வாலு’க்காக டி.ராஜேந்தர் பாடியதைப் போல இப்போது ‘வீரசிவாஜி’க்காக சிம்பு ‘தாறு மாறு’ என்று துவங்கும் பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ‘வீரசிவாஜி’ படக்குழுவினர். வெற்றிப் படமாக அமைந்த ‘ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் ‘வீரசிவாஜி’யில் விக்ரம் பிரபு, ஷாமிலியுடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;