கார்த்தி, மணிரத்னம் படம் எப்போது?

கார்த்தி, மணிரத்னம் படம் எப்போது?

செய்திகள் 14-May-2016 10:11 AM IST VRC கருத்துக்கள்

‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தோழா’ என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் கார்த்தியின் அடுத்த படம் ‘காஷ்மோரா’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் கோகுல் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் முடிந்து விடும். இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி! மணிரத்னம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ‘காஷ்மோரா’வின் டப்பிங் வேலைகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார் கார்த்தி. மணிரத்னம் இயக்கும் பட வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு, ‘சதுரங்க வேட்டை’ பட புகழ் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இப்படத்தையும் ‘காஷ்மோரா’ படத்தை தயாரிக்கும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. காஷ்மோராவை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் மணிரத்னம் படத்தின் அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;