‘பர்த்டே பேபி’ சன்னிலியோன் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

‘பர்த்டே பேபி’ சன்னிலியோன் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

கட்டுரை 13-May-2016 4:23 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு காலத்தில் மறைமுகமாக சன்னி லியோனை ரசித்துக் கொண்டிருந்த ‘அடல்ட்’ ரசிகர்கள், இன்று வெள்ளித்திரையில் இந்திய கதாநாயகியாக கொண்டாடி வருகிறார்கள். 1981ஆம் ஆண்டு, மே 13ஆம் தேதி பிறந்த சன்னி லியோனுக்கு இன்று 36 வயதைத் தொட்டிருக்கிறார். சன்னி லியோன் என்றாலே ‘நீலப்பட நடிகை’ என்ற நினைப்பைத் தாண்டி, அவர் பற்றிய 10 சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே உங்களுக்காக...

1. சன்னி லியோனுக்கு பெற்றோர் வைத்த பெயர் கரென்ஜித் கவுர் வோரா. மேடை நிகழ்ச்சியில் முதன்முதலாக தோன்றியபோது தன்னை ‘கரென்ஜித் மல்கோத்ரா’ என அறிமுகம் செய்துகொண்டார் சன்னி லியோன். பின்னர் மாடலாக நடிக்கத் துவங்கியதும் சன்னி லியோனாக மாறினார். இன்று உலகமே உச்சரிக்கும் பெயராக இது மாறியிருக்கிறது.

2. இன்று நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சன்னி லியோன் டீன் ஏஜ் வயதில், ‘நர்ஸு’க்காகப் படித்தவர். மாடலாக மாறுவதற்கு முன் ஜெர்மன் பேக்கரி ஒன்றில் வேலை செய்திருக்கிறாராம் சன்னி.

3. 2005ல் எம் டிவி நடத்திய விருது விழாவின் மூலமே இந்தியாவிற்கு அறிமுகமானவர் சன்னிலியோன்.

4. 2005லேயே ‘கல்யுக்’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சன்னி லியோனுக்கு வந்தது. ஆனால், கிட்டத்தட்ட 5 கோடி ரூபாயை அவர் சம்பளமாகக் கேட்க, அந்த வாய்ப்பு நழுவியது.

5. அப்பா மகேஷ் பட் செய்ய முடியாததை, மகள் பூஜா பட் 2012ஆம் ஆண்டு செய்து காட்டினார். ஆம்... ‘ஜிஸ்ம்2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார் சன்னி லியோன். இப்படத்திற்கு கதை எழுதியவர் ‘கல்யுக்’ படத்தைத் தயாரித்த மகேஷ் பட் என்பது கூடுதல் தகவல்.

6. 2015ஆம் ஆண்டு கூகுளில், இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் அனைத்துப் பிரபலங்களையும் முந்தி முதலிடத்தில் அமர்ந்தவர் அம்மணி சன்னிதான்!

7. சன்னிலியோனுக்கு நாய்கள் என்றால் அத்தனை பிரியமாம். குறிப்பாக தெருவில் அநாதையாக இருக்கும் தத்தெடுப்பதில் நம்மூர் த்ரிஷாவையே மிஞ்சிவிடுவாராம்.

8. பூச்சிகளைக் கண்டால் அலறியடித்து ஓடும் ‘இன்செக்ட் ஃபோபியா’ உண்டாம் சன்னி லியோனுக்கு.

9. 4 பாலிவுட் படங்களில் நடித்தபிறகு, 2014ஆம் ஆண்டு ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தரிசனம் தந்தார் சன்னி.

10. சன்னிக்கு மிகப்பிடித்த இந்திய நடிகர் அமீர்கான். அவருடன் இணையும் வாய்ப்பு இன்னும் அவருக்கு அமையவில்லை. ஆனால், ‘பாலிவுட் சூப்பர்ஸ்டார்’ ஷாருக்கானின் ‘ராயீஸ்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் இந்த 36 வயது இந்திய அழகி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சச்சினை அவதூறாக பேசிய RJ பாலாஜி - வீடியோ


;