விஜய்யுடன் படப்பிடிப்பில் இணைந்த கீர்த்திசுரேஷ்!

விஜய்யுடன் படப்பிடிப்பில் இணைந்த கீர்த்திசுரேஷ்!

செய்திகள் 13-May-2016 3:20 PM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்திற்குப் பிறகு தற்போது நடித்துவரும் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன், இப்படத்தை இயக்குவதன் மூலம் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘இளையதளபதி’ விஜய்யுடன் இணைந்திருக்கிறார். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் மதுரை பின்னணியில் கதைக்களம் அமைந்திருந்த பரதன், ‘விஜய்60’ படத்திற்காக திருநெல்வேலி பின்னணியை களமாக்கியிருக்கிறார். குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில், கிராமத்துப்படமாக உருவாக உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதேபோல் சந்தோஷ் நாராயணன், விஜய் படத்திற்கு இசையமைப்பதும் இதுவே முதல்முறை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை பூந்தமல்லியில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். பின்னர், ‘தெறி’ படத்தின் வெளியீடு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது முழுவீச்சில் ‘விஜய்60’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெறுகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்திருக்கிறார். இதனை அவரே தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;