‘சோனி’யுடன் அனிருத் ஒப்பந்தம்!

‘சோனி’யுடன் அனிருத் ஒப்பந்தம்!

செய்திகள் 13-May-2016 12:59 PM IST VRC கருத்துக்கள்

வரிசையாக ஹிட் அல்பங்களை தந்து வரும் அனிருத் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’, ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘ரம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருவதோடு அடுத்து அஜித் நடிக்கும் படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார். திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருவதோடு, தனியாக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும், இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார் அனிருத்!. இசை துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ள அனிருத் இனி உருவாக்கும் ஆல்பங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் உரிமையை பிரபலமான சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்காக சோனி நிறுவனத்திற்கும், அனிருத்திற்கும் இடையில் சமீபத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதாவது திரைப்பட பாடல்கள் தவிர்த்து அனிருத் இசை அமைக்கும் அனைத்து பாடல்களையும், இசை நிகழ்ச்சிகளையும் இனி சோனி நிறுவனம் தான் வெளியிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;