கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள ‘இறைவி’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அதைப் போல முத்தையா இயக்கத்தில் விஷால் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள ‘மருது’ வருகிற 20-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ மாறுபட்ட ஒரு கதைகளத்தில் பயணிக்கும் வித்தியாசமான கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தணிக்கையான இப்படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ்தான் வழங்கியிருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முதல் படமான ‘பீட்சா’, இரண்டாவது படமான ’ஜிகர்தண்டா’ ஆகிய படங்களுக்கும் சென்சாரில் யு/ஏ சர்டிஃபிக்கெட் தான் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் போல தற்போது ‘மருது’வை இயக்கியிருக்கும் முத்தையாவின் முதல் படமான ‘குட்டிப்புலி’க்கும், இரண்டாவது படமான ‘கொம்ப’னுக்கும் சென்சாரில் ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் தான் கிடைத்திருந்தது. கார்த்திக் சுப்பராஜ், முத்தையா இருவரின் படங்களுக்கான சென்சார் சர்டிஃபிக்கெட் பொருத்தம், அவர்களது அடுத்தடுத்த படங்களில் தொடருமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...