அதர்வாவுடன் இணையும் மேற்கு வங்க நடிகை!

அதர்வாவுடன் இணையும் மேற்கு வங்க நடிகை!

செய்திகள் 13-May-2016 11:09 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் அதர்வா தயாரிப்பாளராக களமிறங்கி தயாரிக்கும் படம் ‘செம போத ஆகாத’. ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘செம போத ஆகாத’ இயக்குபவர் அதர்வாவை ‘பாணா காத்தாடி’ மூலம் நடிகராக அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தான்! இப்படத்தில் அதர்வாவே கதாநாயகனாக நடிக்க, ‘காவியத்தலைவன்’ பட புகழ் அனைகா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது இப்படத்தில் இன்னொரு நாயகி கேரக்டர் உண்டு என்றும் அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகையான மிஸ்தி சக்ரபோர்த்தி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே சில வங்காளம், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘செம போத ஆகாத’ படத்தின் படப்பிடிப்பு தொடந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;