புதுமுகங்களின் ‘தேன் மிட்டாய்’

புதுமுகங்களின் ‘தேன் மிட்டாய்’

செய்திகள் 12-May-2016 1:13 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெ.பி.ஸ்டுடியோஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் தேன் மிட்டாய். ஐந்து கதாநாயகர்கள், ஆறு கதாநாயகிகளை கொண்ட ஐந்து கதைகளை கொண்ட படம் இது. இப்படம் இளம் வயது இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கையை மையமாக வைத்து கிராமம், மற்றும் நாகரத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘இப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் தங்களது பள்ளிப் பருவ காதல் நிச்சயம் ஞாபகத்திற்கு வரும்’ என்கிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கி தயாரித்திருக்கும் ஜே.பாஸ்கர். ராம் சரவணன், கோவிந்த், குணா, மோகன், ரவி, மைலா, பாரதா, ஹென்சா, சுஜித்ரா, பூஜா என இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களே! இப்படத்திற்கு சேவியர் இசை அமைக்க, கலைவேந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

1 பந்து 4 ரன் 1 விக்கெட் - டிரைலர்


;