ஜி.வி.யின் பாடல்களை வெளியிட்ட ‘எந்திரன் 2’ வில்லன்!

ஜி.வி.யின் பாடல்களை வெளியிட்ட ‘எந்திரன் 2’ வில்லன்!

செய்திகள் 12-May-2016 11:31 AM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சாம் ஆண்டன், இசையமைப்பாளர்/நடிகர் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பான ஷங்கரின் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்.

இரண்டு படங்களுமே ஒரே நிறுவனம் தயாரிக்கும் படமொன்பதால் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் பாடல்களை நடிகர் அக்ஷய்குமார் இன்று வெளியிட்டுள்ளார். இதனால் இப்படம் கோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் வரையில் கவனம் பெற்றிருக்கிறது. 4 பாடல்களும், ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.


Enakku Innoru Per Irukku - Official Jukebox

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;