‘கிடாரி’யில் ‘வெற்றிவேல்’ நாயகி, ‘ராஜதந்திரம்’ காமெடியன்!

‘கிடாரி’யில் ‘வெற்றிவேல்’ நாயகி, ‘ராஜதந்திரம்’ காமெடியன்!

செய்திகள் 12-May-2016 11:15 AM IST Chandru கருத்துக்கள்

‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிகிலா. மியா ஜார்ஜுடன் இன்னொரு நாயகியாக நடித்த இவர், ‘வெற்றிவேல்’ படத்தின் இரண்டாம்பாதியில், சசிகுமாரின் மனைவியாக முக்கிய கேரக்டரில் நடித்தார். குடும்பப்பாங்கான அவரின் தோற்றமும், யதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை மட்மின்றி சசிகுமாரையும் வெகுவாகக் கவர்ந்தது. இதனால், சசிகுமார் தற்போது நடித்து வரும் புதிய படமொன்றிலும் நிகிலா நாயகியாகத் தொடர்ந்துள்ளார்.

அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் இப்படத்திற்கு ‘கிடாரி’ என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதாக சசிகுமார் ட்வீட் மூலம் தெரிவித்திருக்கிறார். ‘ராஜதந்திரம்’ படத்தில் காமெடியனாக நடித்த ‘டர்புக்கா சிவா’ இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;