60 நாட்கள் தொடர் படப்பிடிப்பு: ‘றெக்க’யின் ஜெட் வேக பிளான்!

60 நாட்கள் தொடர் படப்பிடிப்பு: ‘றெக்க’யின் ஜெட் வேக பிளான்!

செய்திகள் 12-May-2016 11:04 AM IST Chandru கருத்துக்கள்

தர்மதுரை படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது றெக்க, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. இதில், ‘றெக்க’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து 60 நாட்கள் நடத்தி, முழுப்படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ‘வா டீல்’ ரத்தின சிவா இயக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். எடிட்டிங் பிரவீன் கே.எல்.

மே 6ஆம் தேதி ‘றெக்க’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. விஜய்சேதுபதியின் கையில் ஏகப்பட்ட படங்கள் வரிசைகட்டி காத்துக் கொண்டிருப்பதால், ‘றெக்க’ படத்தின் படப்பிடிப்பை ஜெட் வேகத்தில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். சென்னையில் துவங்கியிருக்கும் முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து, திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களின் சில ஊர்களிலும் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம். ‘வேதாளம்’ வில்லன் கபீர் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;