அறிவழகன் - அருண் விஜய்யின் ‘குற்றம் 23’

அறிவழகன் - அருண் விஜய்யின் ‘குற்றம் 23’

செய்திகள் 12-May-2016 10:55 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு, தமிழகமெங்கும் பரவலான ரசிகர்களை அப்படம் பெற்றுத் தந்தது. அதன்பிறகு, அருண் விஜய் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கினார். ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனம், பலதரப்பினரிடம் கதைகளைக்கேட்டு இறுதியாக ‘ஈரம்’ புகழ் அறிவழகனின் கதையை படமாக்க முடிவு செய்தது.

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 60% மேல் முடிவடைந்துவிட்டனவாம். இந்நிலையில், தற்போது அப்படத்திற்கு ‘குற்றம் 23’ என்று பெயரிட்டுள்ளனர். இது அருண்விஜய்யின் 23வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர். மெடிக்கல் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பை ஜூனுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;