டபுள் மகிழ்ச்சியில் ‘VVV’ படக்குழுவினர்!

டபுள் மகிழ்ச்சியில் ‘VVV’ படக்குழுவினர்!

செய்திகள் 12-May-2016 9:45 AM IST VRC கருத்துக்கள்

‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனையொட்டி நேற்று இப்படம் சென்சார் குழுவினர் பார்வைக்கு செல்ல, படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல் அனைவரும் பாரக்க கூடிய படம் என்று ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் மற்றும் 19 நிமிடங்கள் ஓடும் விதமாக அமைந்துள்ள இப்படத்திற்கு வரி சலுகையும் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதனால் ‘VVV’ படக்குழுவினர் டபுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். விஷ்ணு விஷாலும், எழில் ரஜினி நட்ராஜும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யா இசை அமைத்துள்ளார். சென்ற 6-ஆம் தேதி வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களின் வரிசையில் இப்படமும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;