‘அச்சமின்றி’ அனைவரும் வரலாம் - சென்சார் அனுமதி!

‘அச்சமின்றி’ அனைவரும் வரலாம் - சென்சார் அனுமதி!

செய்திகள் 11-May-2016 5:11 PM IST VRC கருத்துக்கள்

’என்னமோ நடக்குது’ என்ற படத்தை தயாரித்த வி.வினோத்குமார் தயாரித்திருக்கும் படம் ‘அச்சமின்றி’. விஜய் வசந்த், வினோத்குமார், பிரேம்ஜி, சமுத்திரகனி, ஸ்ருஷ்டி டாங்கே முதலானோர் நடித்துள்ள இப்படம் இன்று சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. ‘அச்சமின்றி’ படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருப்பதால் அனைவரும் இப்படத்திற்கு அச்சமின்றி வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ராஜ்பாண்டி கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீஸரை நாளை மறுநாள் (மே-13) நடிகர் விஷால் வெளியிடவிருக்கிறார். இதனை தொடர்ந்து இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;