தல 57-ல் இணைகிறாரா ‘இறுதிச்சுற்று’ நாயகி?

தல 57-ல் இணைகிறாரா ‘இறுதிச்சுற்று’ நாயகி?

செய்திகள் 11-May-2016 4:17 PM IST VRC கருத்துக்கள்

அஜித், சிவா கூட்டணியில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் அஜித்தின் 57-வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு பட்டியலில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அனுஷ்கா, ‘வீரம்’ படத்தில் இணைந்து நடித்த தமன்னா ஆகியோருடன் புதிதாக எமி ஜாக்சனும் இணைந்துள்ளார். இவர்களில் யார் அஜித்துக்கு ஜோடியாவர் என்பது விரைவில் தெரிந்து விடும். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயின் தவிர்த்து மற்றொரு முக்கிய கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டரில் ‘இறுதிச்சுற்று’ நாயகியான ரித்திகா சிங்கை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை தயாரிப்பு தரப்பினர் வெளிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;