கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் மஞ்சிமா மோகன், எஸ்.அர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கௌதம் மேனன் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வரும் மஞ்சிமா மோகனனை தான் அடுத்து விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க வைத்து இயக்கவிருக்கும் படத்திற்காக இயக்குனர் கே.வி.ஆனந்தும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்படம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும், அநேகமாக கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி மஞ்சிமா மோகன் தான் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படங்கள் தவிர உதயநிதி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் மஞ்சிமா மோகனிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...