நாளை ஜி.வி.யின் மியூசிக் ட்ரீட்!

நாளை ஜி.வி.யின் மியூசிக் ட்ரீட்!

செய்திகள் 11-May-2016 12:05 PM IST VRC கருத்துக்கள்

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவிருக்கிறது. ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்களை தொடர்ந்து ஜி.வி.நடிப்பிலும், இசை அமைப்பிலும் வெளிவரவிருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்பதால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் ஜி.வி.யுடன் இணைந்து நடித்த ஆனந்தி தான் இப்படத்திலும் ஜி.வி.க்கு ஜோடி என்பதும் இப்படத்தின் ஒரு சிறப்பாகும். வரிசையாக பல படங்களை தயாரித்து வரும் ‘லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பான இப்படம் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டிரைலர்


;