அடுத்த கட்டத்திற்கு நகரும் லிங்குசாமி - அல்லு அர்ஜூன் புராஜெக்ட்!

அடுத்த கட்டத்திற்கு நகரும் லிங்குசாமி - அல்லு அர்ஜூன் புராஜெக்ட்!

செய்திகள் 11-May-2016 11:36 AM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தன் அடுத்த படத்தை துவக்குவதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. விஷாலை வைத்து ‘சண்டக்கோழி’ படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க முதலில் திட்டமிட்டிருந்தார். சிற்சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார் என்ற செய்தி கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது.

அல்லு அர்ஜுன் படத்திற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணிகளில் பிஸியாக இருந்த லிங்குசாமி தற்போது அந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டாராம். இதனால், ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சராய்நோடு’ தெலுங்குப் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்குப் பிறகு ‘24’ இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் அல்லு அர்ஜுன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சண்டக்கோழி 2 ட்ரைலர்


;