ஜூலை 1ஆம் தேதி முதல் உலகமெங்கும் ‘கபாலி’!

ஜூலை 1ஆம் தேதி முதல் உலகமெங்கும் ‘கபாலி’!

செய்திகள் 11-May-2016 11:21 AM IST Chandru கருத்துக்கள்

‘கபாலி’ டீஸர் வெளிவந்தது முதலே, படத்தை எப்போது பார்க்கலாம் என ஒவ்வொரு ரசிகர்களும் தவம் கிடக்கிறார்கள். ரஞ்சித்தின் இயக்கத்தில் பழைய மாஸ் ரஜினியை பார்த்த திருப்தியில் ‘கெத்தா’க சுற்றிவருகிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிக்கும் வரை அமைதியாக இருங்கள் என தயாரிப்பாளர் தாணுவே சொல்லிவிட்டாலும்கூட, படத்தின் ரிலீஸ் தேதியை அறியும் ஆவலில் ஆளாளுக்கு ஒரு ரிலீஸ் தேதி அறிவித்து வருகிறார்கள். அந்தவகையில், முதலில் ஜூலை 7ஆம் தேதி ‘கபாலி’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்பின்னர், மே இறுதியில் பாடல்கள், ஜூன் முதல் வாரத்தில் படம் ரிலீஸ் என்ற தகவலும் வந்தது.

லேட்டஸ்ட்டாக, விநியோகஸ்தர் தரப்பில் விசாரித்தபோது நமக்குக் கிடைத்த தகவல்... ‘கபாலி’க்காக ஜூலை 1ஆம் தேதி தியேட்டர்களை ‘புக்’ செய்து வைத்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. அனேகமாக இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;