துவங்கியது கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசு படம்!

துவங்கியது கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசு படம்!

செய்திகள் 11-May-2016 10:58 AM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கௌதம் வி.ஆர்.இயக்கும் படம் ‘7 நாட்கள்’. இப்படத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி வாசு, கணேஷ் வெங்கட்ராம் இணைந்து நடிக்க கதாநாயகிகளாக நிகிஷா பட்டேல், அங்கனா ராய் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை சென்ற (ஏப்ரல்) மாதம் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இப்படம் குறித்து இயக்குனர் கௌதம் வி.ஆர். கூறும்போது, ‘‘இது அனைத்து விஷயங்களும் கலந்த அதிரடி ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படம்’’ என்று கூறியிருக்கிறார். ‘மில்லியன் டாலர் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கார்த்திக், கார்த்திகேயன் இருவர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாயகி - டிரைலர்


;