ஜூன் மாத இறுதியில் ‘ரம்’மின் கடைசி ரவுன்ட்!

ஜூன் மாத இறுதியில் ‘ரம்’மின் கடைசி ரவுன்ட்!

செய்திகள் 11-May-2016 10:51 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து ஹாரர் பேய்ப் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்திற்குமேல் ரசிகர்களுக்கே போரடித்துவிட்டாலும், கோடம்பாக்கம் பேய்களை விடுவதாய் இல்லை. இப்போதும்கூட மாதத்திற்கு 4 பேய்ப்படங்களாவது ரிலீஸாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், ‘ரம்’ என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது இன்னொரு பேய்ப்படம். சாய் பரத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்க அனிருத் இசையமைக்கிறார். ‘ஹோலா அமிகோ’ என்ற மலேசியா வார்த்தையில் துவங்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘வேலையில்லா பட்டதாரி’ ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 60% மேல் முடிவடைந்துவிட்டன. ஜூன் மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பு வேலைகளையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். தற்போது ‘ஹோலா அமிகோ’ பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;