கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான சூர்யாவின் ‘24’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. டைம் டிராவல் பற்றிய கதையை கொண்ட படம் இது என்பதால் இப்படத்தில் வாட்ச் முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்படம் குழந்தைகளையும் கவர்ந்துள்ளதால் இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் மேலும் மகிழ்விக்கும் விதமாக வாட்ச் ஒன்று பரிசளிக்கப்படுகிறது. சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ தயாரித்து சமீபத்தில் வெளியான ‘பசங்க-2’ திரைப்படத்திலும் குழுந்தைகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. இந்த படம் வெளியான நேரத்தில் இப்படத்தை பார்க்க வந்த 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டதைப் போல இப்போது சூர்யாவின் ‘24’ படம் மூலமும் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக வாட்ச் பரிசளிக்கப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...