விஷாலின் “மருது’ சென்சார் ரிசல்ட்!

விஷாலின் “மருது’ சென்சார் ரிசல்ட்!

செய்திகள் 10-May-2016 6:36 PM IST VRC கருத்துக்கள்

முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்திருக்கும் ‘மருது’ திரைப்படம் இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனையொட்டி இன்று இப்படத்தின் சென்சார் நடைபெற்றது. ‘மருது’வை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் ஒரு சில வசனங்களுக்கு கட் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து ‘மருது’வுக்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இந்த தகவலை விஷால் ட்வீட் செய்துள்ளார். மருதுவுக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த படக் குழுவினருக்கு இந்த ரிசல்ட் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;