அஜித் நாயகிப் பட்டியல் : லேட்டஸ்ட் வரவு எமி!

அஜித் நாயகிப் பட்டியல் : லேட்டஸ்ட் வரவு எமி!

செய்திகள் 10-May-2016 3:48 PM IST Chandru கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு அஜித் படத்தை 3வது முறையாக இயக்குகிறார் சிவா. சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு வேதாளத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்திரனே இசையமைக்கிறார். இப்படத்தில் நாயகனாக நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் அஜித் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் துவங்க உள்ள இப்படத்தின் நாயகிக்கான தேடுதல் வேட்டையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்களாம். ஏற்கெனவே அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நாயகிப் பட்டியலில் இருக்கிறார்கள். இப்போது அந்தப் பட்டியலில் எமி ஜாக்சனும் இணைந்திருக்கிறாராம். ‘தெறி’ படத்திற்குப் பிறகு தற்போது ரஜினியின் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்திலும் நடித்து வருகிறார் எமி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;