விஷ்ணுவின் ஜூன் ராசி - VVV-க்கும் கை கொடுக்குமா?

விஷ்ணுவின் ஜூன் ராசி - VVV-க்கும் கை கொடுக்குமா?

செய்திகள் 10-May-2016 3:31 PM IST VRC கருத்துக்கள்

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை துவங்கியுள்ள படக்குழுவினர் இப்படத்தை ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். விஷ்ணு விஷாலை பொறுத்தவரை ஜூன் மாதம் அவருக்கு ராசியான மாதம் போலும்! அவர் நடித்த ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. அதைப் போல அவர் நடித்த ‘இன்று நேற்று நாளை’ திரைப்படமும் ஜூன் மாதம் (2015-ல்) தான் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்ததை தொடர்ந்து விஷ்ணுவிஷால் தனது ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன்’ படத்தையும் ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்! ஜூன் 3-ஆம் தேதி கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களுக்கும் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டுள்ளது. இது தவிர சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ திரைப்படமும் ஜூன் 3-ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;