ரிச்சர்டை அதிர்ச்சி அடைய வைத்த ஹீரோயின்!

ரிச்சர்டை அதிர்ச்சி அடைய வைத்த ஹீரோயின்!

செய்திகள் 10-May-2016 3:25 PM IST VRC கருத்துக்கள்

‘சுதா மூவி கிரியேஷன்ஸ்’ சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் ‘அந்தமான்’. இப்படத்தில்
ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்க், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போண்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘கோகோ கோகோ கோலா... நான் வந்திருக்கேன் கூலா...’ என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்ட பாடல் இதுதானாம். இது ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் பாடலாகும். பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப் போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு தான் ஹீரோயின் சோப் போடுவார். ஆனால், இப்படத்தில் உல்டாவாக வில்லனுக்கு ஹீரோயின் சோப் போட்டதால், ஹீரோ ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதியுள்ள இப்பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.
இப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இயக்குகிறார். அந்தமானில் இது வரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;