‘அச்சமின்றி’ டீசரை விஷால் வெளியிடுகிறார்!

‘அச்சமின்றி’ டீசரை   விஷால் வெளியிடுகிறார்!

செய்திகள் 10-May-2016 11:12 AM IST VRC கருத்துக்கள்

‘என்னமோ நடக்குது’ என்ற படத்தைத் தயாரித்த ‘டிரிபிள் வி ரெகார்ட்ஸ்’ பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’. தயாரிப்பாளர் வினோத்குமார், விஜய் வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் ‘என்னமோ நடக்குது’ படத்தில் இணைந்துள்ளார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கும் ராஜபாண்டி படம் குறித்து பேசும்போது,

‘‘இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது? அதைப்போல சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை கமர்ஷியல் விஷயங்கள் கலந்து இப்படத்தில் சொல்லுகிறோம். இப்படத்தின் டீசரை பார்த்து நடிகர் விஷால் சார் வெகுவாக பாராட்டியதோடு அவரே இம்மாதம் 13-ஆம் தேதி டீசரை வெளியிடவும் இருக்கிறார். அவருக்கு எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏ.வெங்கடேஷ் கவனிக்க, பிரேம்ஜி இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;