ஜூன் 9-ல் ‘ரெமோ’ ஃபர்ஸ்ட் லுக்!

ஜூன் 9-ல் ‘ரெமோ’ ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகள் 9-May-2016 4:49 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ‘ரெமோ’வின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். அனிருத் இசை அமைத்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்கை ஜூன் 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ’24 AM Studios’ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படமான இப்படத்தில் சிவகார்த்திகேயன் நன்கு கெட்-அப்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பை கவனித்துள்ளார். அனிமேஷன் வேலைகளை பிரபல Weta Studios நிறுவனம் கவனிக்கிறது. சிவகார்த்திகேயனுடன் பெரிய டெக்னீஷியன்கள் பலர் இணைந்திருக்கும் ‘ரெமோ’வுக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;