24-க்கு கிடைத்த வரவேற்பு : நன்றி தெரிவித்த சூர்யா!

24-க்கு கிடைத்த வரவேற்பு : நன்றி தெரிவித்த சூர்யா!

செய்திகள் 9-May-2016 3:24 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகியுள்ள ‘24’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. விக்ரம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் 3 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார் சூர்யா. அதோடு 5 விதமான கெட்அப்களில் தோன்றியும் அசத்தியிருக்கிறார். சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் சூர்யா. ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழாக்கம் இங்கே....

வணக்கம் நண்பர்களே...

‘24‘ படத்திற்காக நிறைய பாராட்டுக்கள் எங்களை நோக்கி வந்த வண்ணமுள்ளன.

இரண்டு படங்களை மட்டுமே உருவாக்கியுள்ள ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், ஒரு பெரிய படத்தை எடுத்திருப்பது ஒரு மிகப்பெரிய நடவடிக்கைதான். டைம் டிராவல் பற்றிய ஒரு ஃபேன்டஸி படத்தின் கதையை ரொம்பவும் எளிமையமாக விளக்கினார் விக்ரம்குமார். ரசிகர்களின் பார்வைக்கு இப்படத்தின் காட்சிகள் எப்படி காட்டப்படும் என்பதை விளக்குவதற்காக முன்கூட்டியே நிறைய ஹோம்ஒர்க் செய்திருந்தார். இப்படம் சிறப்பாக வருவதற்கு காரணமாக இருந்த என்னுடன் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்!

படத்தில் நான் ஏற்றிருந்த 3 கதாபாத்திரங்களுக்குமே பாராட்டுக்கள் கிடைத்தது ஒரு நடிகனாக எனக்கு மிகவும் நல்ல ஒரு உணர்வைத் தந்திருக்கிறது. இப்படத்தை விரும்பிய ஒவ்வொருவருக்கும் நான் உண்மையாக நன்றி சொல்லிக்கொள்கிறேன், இயக்குனர் விக்ரம்குமார் எப்போதும் சொல்வார்... உங்களுக்காக எங்கள் இதயத்திலிருந்து நாங்கள் ஒரு படத்தை உருவாக்கியிருக்கினோம்... இப்போது எனக்கும், ‘24‘ படக்குழுவினருக்கும் உங்களிடமிருந்து குவியும் அன்பையும், பாராட்டுக்களையும் சிரம் தாழ்ந்து பெற்று வருகிறோம்.

அனைவருக்கும் நன்றி!
அன்பு கலந்த மரியாதையுடன்
சூர்யா

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;