நடிகர் சங்கத்திடம் 1 கோடி செக் கொடுத்த லைக்கா!

நடிகர் சங்கத்திடம் 1 கோடி செக் கொடுத்த லைக்கா!

செய்திகள் 9-May-2016 2:57 PM IST VRC கருத்துக்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸும், ராஜ் கமல் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கும் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜை சமீபத்தில் நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு கமல்ஹாசன் இரண்டரை லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அத்துடன் கமல்ஹாசனுடன் படத்தயாரிப்பில் இணைந்துள்ள லைக்கா புரொடக்‌ஷன் நிறுவனமும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அந்த விழாவில் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து ‘லைக்கா’வில் முக்கிய பதவி வகித்து வரும் ராஜு மகாலிங்கம் இன்று ஒரு கோடி ரூபாய்க்கானா காசோலையை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, செயலாளர் விஷால் ஆகியோரை சந்தித்து வழங்கினார். இந்த சந்திப்பின் போது நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரானா நடிகர் பொன்வண்ணன் மற்றும் ஐசரி கணேஷ், நடிகர் ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;