தனுஷின் ‘வுண்டர்பார்’ தயாரிப்பில் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் அதே நிறுவனத்திற்காக தனுஷை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் அரசியல் வாதியாக வரும் தனுஷுக்கு இணையாக த்ரிஷா நடிக்க இன்னொரு தனுஷுக்கு ‘பிரேமம்’ படப் புகழ் அனுபமா ஜோடியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றன. ஜூலை முதல் வாரம் ரம்ஜான் பண்டிகை வருகிறது! இதனையொட்டி ‘கொடி’யை ஜூலை மாதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய முடிவு செதிருக்கிறார்களாம். பிரபு சாலமன் இயக்கதில் தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’யும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...