‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றி தந்த உற்சாகத்தில், இப்போது நல்ல கதைகளை தேடிப்பிடித்து அதில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் காமெடி படமான ‘ஜாக்சன் துரை’ விரைவில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் வெற்றிபெயற்ற ‘க்ஷணம்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் சிபிராஜ் கைப்பற்றியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் துவங்கும் எனத்தெரிகிறது.
இந்த இரண்டு படங்களோடு தற்போது புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார் சிபிராஜ். இப்படத்தை, அறிவழகனிடம் அசோஷியேட்டாகப் பணிபுரிந்த மணி சேயோன் என்பவர் இயக்குகிறார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் பெல்ஜியம் ஷெப்பர்டு நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுபோல, மணி சேயோன் இயக்கும் படத்தில் மீன் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிக்கிறதாம். மீன்களுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் கேரக்டர் ஒன்றில் நடிப்பதற்காக இயக்குனர் நலன் குமாரசாமியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பொரும்பாலான வேலைகள் முடிவடைந்துவிட்டனவாம். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கி வரும்...
சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’ மற்றும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு படம் ஆகியவை ரிலீஸுக்கு...