ஷிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன், யோகிபாபு முதலானோர் நடித்திருக்கும் படம் ‘மெட்ரோ’. இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி தயாரித்திருக்கிறார். இப்படத்திற்காக கானா பாலா பாடிய ‘பூமி…’ என்று துவங்கும் பாடலை சமீபத்தில் நடிகர் கார்த்தி வெளியிட்டார். ஹெல்மெட் அணிந்து வந்து பெண்களின் நகைகளை பறித்துச் செல்லும் திருடர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் சென்சார் குழுவின் பார்வைக்கு சென்றது. படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இருப்பதாக கூறி அந்த காட்சிகளை நீக்க சொல்லியிருக்கிறார்கள் சென்சார் குழுவினர். இதனை தொடர்ந்து ஆட்சேபகரமான அந்த காட்சிகளை நீக்கிவிட்ட பிறகு ‘மெட்ரோ’வுக்கு ‘A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள் சென்சார் குழுவினர்! என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜான் இசை அமைத்துள்ளார். சென்சார் முடிந்ததை தொடர்ந்து ‘மெட்ரோ’வை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் பிசியாகியுள்ளார்கள் படக்குழுவினர்.
மாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்!...
‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த்...
‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய்...