அஜித்தின் ‘பில்லா 2’ படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்திலும் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார். ‘2.0’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சுதான்ஷு பாண்டே அக்ஷய்குமாருடன் கூட்டணி அமைத்து சிட்டி ரோபோவை பழிவாங்கத் துடிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறாராம். கதைப்படி, ‘எந்திரன்’ முதல் பாகத்தில் சிட்டி ரோபோவால் கொலை செய்யப்படும் புரொபஸர் போராவின் மகன் கேரக்டரில்தான் ‘2.0’வில் நடிக்கிறாராம் சுதான்ஷு. இவருக்கும் இப்படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரம்தானாம். சமீபத்தில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் அக்ஷய்குமாருடன் சுதான்ஷு பாண்டேவும் இணைந்து நடித்துள்ளார். இன்னும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லையாம்.
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...
‘களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராகவி தயாரிக்க, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்...