புதிய ரிலீஸ் தேதி அறிவித்த ‘இறைவி’ படக்குழு!

புதிய ரிலீஸ் தேதி அறிவித்த ‘இறைவி’ படக்குழு!

செய்திகள் 9-May-2016 10:25 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள ‘இறைவி’ திரைப்படத்தை முதலில் இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஆனால் இப்போது ‘இறைவி’யின் ரிலீஸை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது ‘இறைவி’யை ஜூன் 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘இறைவி’யின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவரும் படம், விஜய்சேதுபதி. எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ள படம் என பல சிறப்புக்கள் ‘இறைவி’க்கு இருப்பதால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இறைவி வெளியாகவிருக்கும் ஜூன் 3 ஆம் தேதி ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படமும் ரிலீஸாகவிருப்பதோடு, ரஜினியின் ‘கபாலி’யையும் இதே நாளில் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;