பரபர ரிலீஸ் பிளானில் ரஜினியின் ‘கபாலி’

பரபர ரிலீஸ் பிளானில் ரஜினியின் ‘கபாலி’

செய்திகள் 9-May-2016 10:17 AM IST Chandru கருத்துக்கள்

மே 1ஆம் தேதி யு டியூப்பில் வெளியான ‘கபாலி’ டீஸர், 9 நாட்களில் 1 கோடி 56 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களைச் சந்தித்துள்ளது. இந்த இமாலய சாதனையின் பரபரப்பு அடங்கும் முன்பே ‘கபாலி’ பாடல்களையும், படத்தையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் கலைப்புலி எஸ்.தாணு. சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ பாடல்கள் வெளியீட்டை இம்மாத இறுதியில் சென்னையில் பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறதாம். முதலில் மலேசியாவில் ஆடியோ விழாவை நடத்தலாம் என்ற யோசனையில் இருந்தார்கள். ஆனால், இப்போது இங்கேயே நடத்திவிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சத்யம் திரையரங்கு அல்லது நேரு ஸ்டேடியத்தில் இதற்கான விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

அதேபோல் படம் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் புதிய சூழலில், ‘கபாலி’ படம் ஜூன் முதல் வாரத்திலேயே ரிலீஸானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். மொத்தத்தில் ரிலீஸ் வேலைகளில் தற்போது பரபரப்பாகியுள்ளதாம் ‘கபாலி’ டீம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;