வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - இசை விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 7-May-2016 3:10 PM IST Chandru கருத்துக்கள்

‘வெள்ளக்காரதுரை’ படத்திற்குப் பிறகு எழில் இயக்கிவரும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. கடந்த மூன்று படங்களாக டி.இமானுடன் இசைக்கூட்டணி அமைத்து வந்த எழில், இப்படத்திற்காக ‘எங்கேயும் எப்போதும்’ சி.சத்யாவுடன் இணைந்திருக்கிறார். பாடல்கள் எப்படி அமைந்திருக்கின்றன?

ஆரவல்லி...
பாடியவர்கள் : ‘வைக்கம்’ விஜயலட்சுமி, மகாலிங்கம்
பாடலாசிரியர் : யுகபாரதி


வைக்கம் விஜயலட்சுமியின் குரலில், ஆல்பத்தின் முதல் பாடலே அதிரடி நாட்புப்புற குத்துப்பாடலாக அமைந்திருக்கிறது. பி, சி ஆடியன்ஸை குறிவைத்து உருவாக்கப்படிருக்கும் இப்பாட்டை ஹிப் ஹாப்பையும், குத்தையும் கலந்து வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறார். விஜயலட்சுமியின் கணீர் குரல் பாடலுக்கு பெரிய ப்ளஸ். யுகபாரதியின் வரிகளும் நன்றாகவே இருக்கின்றன.

குத்தூட்டி கண்ணுல...
பாடியவர்கள் : சத்ய பிரகாஷ்
பாடலாசிரியர் : யுகபாரதி


எழில் படங்களுக்கே உரிய அருமையான மெலடி ரகப் பாடல். சத்ய பிரகாஷின் சோலோ வாயிஸில் அருமையாக ஒலிக்கிறது. நாயகியைப் பார்த்து நாயகன் உருகிப் பாடும் சூழலுக்கேற்ற அருமையான வரிகளை உருவாக்கியிருக்கிறார் யுகபாரதி. கேட்டவுடன் பிடிக்கும் ரகம்!

பப்பரமிட்டாய்...
பாடியவர்கள் : ஸ்ரீராமச்சந்திரா
பாடலாசிரியர் : யுகபாரதி


இதுவும் ஒரு ஆண்குரல் சோலோ பாடல்தான். பேன்ட் வாத்தியங்களைப் பயன்படுத்தி இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் சி.சத்யா. இப்பாடலுக்கான விஷுவல் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும்.

அய்யோ பாவம்...
பாடியவர்கள் : ஜெயமூர்த்தி
பாடலாசிரியர் : யுகபாரதி


நாயகனின் காதல் தோல்வி சூழலில், பெண்களைக் குறைகூறி பாடப்படும் வழக்கமான தமிழ் சினிமா பாடல்தான் இதுவும். கிடார், டிரம்ப்பெட், வயலின், நாதஸ்வரம், டிரம்ஸ் என அனைத்து வாத்தியங்களையும் இப்பாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயமூர்த்தியின் ‘கணீர்குரல்’ பாடலுக்கான எனர்ஜியை பன்மடங்காக்கியிருக்கிறது. ஆவரேஜ் ரகம்!

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு பெரிய கவனம் எதுவும் பெறாத சி.சத்யா, இந்த ஆல்பத்தில் அந்த குறையைப் போக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படத்திலும் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. ஒரேயொரு மெலடியைத் தவிர்த்து ஆல்பத்தின் மற்ற 3 பாடல்கள் ஆவரேஜ் ரகமாகவே அமைந்துவிட்டன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;