ஒரு மாதத்திற்குள் ஜி.வி.யின் 2 படங்கள்!

ஒரு மாதத்திற்குள் ஜி.வி.யின் 2 படங்கள்!

செய்திகள் 7-May-2016 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷும், சாம் ஆண்டனும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து, நடித்து வெளிவர இருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். இந்த படம் வெளியாவதற்கு முன் மணி நாகராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான ‘பென்சில்’ படம் இம்மாதம் 13-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஜி.வி.நடிப்பில் ஒரு மாதத்திற்குள் 2 படங்கள் வெளியாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;