இம்மாதம் 21-ல் தரமணி!

இம்மாதம் 21-ல் தரமணி!

செய்திகள் 7-May-2016 10:18 AM IST VRC கருத்துக்கள்

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராம் ‘தரமணி’, ‘பேரன்பு’ என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதில் ‘தரமணி’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் ‘தரமணி’க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இவர் இசை அமைப்பில் ஆத்மா - The soul of Taramani என்று துவங்கும் சிங்கிள் டிராக் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் பிரபலமானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இம்மாதம் 21-ஆம் தேதி ளியிட முடிவு செய்துள்ளார்கள். ‘தரமணி’யில் வசந்த் ரவி கதாநாயகானக நடிக்க, ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் வாழ்க்கையில் ஐடி துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் பின்னணியில் சொல்லப்படும் கதை ‘தரமணி’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - டிரைலர்


;