தேர்தல் நேரத்தில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்!

தேர்தல் நேரத்தில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 6-May-2016 4:41 PM IST Chandru கருத்துக்கள்

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் டீஸர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்க, நீண்டநாட்களாக ரிலீஸ் தள்ளிக் கொண்டேயிருக்கும் ஜி.வி.பிரகாஷின் ‘பென்சில்’ படத்திற்கு மீண்டும் ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான மே 13ஆம் தேதி ‘பென்சில்’ படம் வெளியாகும் என்கிறார்கள். இதே தேதியில் ‘கோ 2’ படமும் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக முதன்முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இப்படத்தை மணி நாகராஜ் இயக்கியிருக்கிறார். ஜி.வி.யே இசையமைத்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ரிலீஸாகாமல் போன ‘பென்சில்’ ரிலீஸ் இந்தமுறை நிச்சயமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;