இறுதிகட்டத்தில் ரெமோ – ஆகஸ்ட்டில் ரிலீஸா?

இறுதிகட்டத்தில் ரெமோ – ஆகஸ்ட்டில் ரிலீஸா?

செய்திகள் 6-May-2016 4:17 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் தற்போது நடந்து வரும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இவர்களுடன் சதீஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் என பெரும் கூட்டணி அமைந்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது ‘24 AM SUDIOS’ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தின் ஒரு பாடலை இம்மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்றும், இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி விக்ரம் நடித்து வரும் ‘இரு முகன்’ படமும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;