ரஜினிக்குப் பிறகு ஜெயம் ரவிக்குக் கிடைத்த கௌரவம்!

ரஜினிக்குப் பிறகு ஜெயம் ரவிக்குக் கிடைத்த கௌரவம்!

செய்திகள் 6-May-2016 4:06 PM IST Chandru கருத்துக்கள்

‘தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்’ என்ற பெருமையோடு சமீபத்தில் வெளிவந்த படம் ‘மிருதன்’. ‘நாய்கள் ஜாக்கிரதை’ புகழ் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் பிரபலமான ஸோம்பி கதைக்களத்தை மையமாக வைத்து தமிழில் வெளிவந்த முதல் ஹாரர் படம் என்பதால் ‘மிருதனு’க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இப்படம் கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஃபேன்டஸியா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலி’ல் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருக்கிறதாம். இந்தத் தகவலை ஜெயரம் ரவியே தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜனியின் ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு 2வதாகத் திரையிடப்படும் தமிழ்ப் படம் என்ற கௌரவம் ஜெயம் ரவியின் ‘மிருதன்’ படத்திற்குக் கிடைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;