விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த சீனுராமசாமி!

விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த சீனுராமசாமி!

செய்திகள் 5-May-2016 3:40 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கியுள்ள ‘தர்மதுரை’ படத்தின் பின்னணி குரல் பதிவு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இன்றுடன் படத்தின் அனைத்து பாத்திரங்களுக்குமான குரல் பதிவு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாம். இதனை தொடர்ந்து படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் வேலைகளை விரைவில் துவங்கவிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என்பதையும், தனது பிசியான படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையே ‘தர்மதுரை’க்காக நேரம் ஒதுக்கி தன் குரலை பதிவு செய்து தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தன் அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்தும் இயக்குனர் சீனுராமசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்! ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்மதுரை’யில் விஜய்சேதுபதியுடன் முதன் முதலாக இனைந்து நடித்துள்ளார் தமன்னா! இப்படத்தின் தமன்னாவும் சொந்த குரலில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;