இன்று அஜித்தின் 57-ஆவது பட ஒப்பந்தம்!

இன்று அஜித்தின் 57-ஆவது பட ஒப்பந்தம்!

செய்திகள் 5-May-2016 11:08 AM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் மூன்றாவதாக இணையும் அஜித்தின் 57-ஆவது படத்தின் ஒப்பந்த வேலைகள் இன்று நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக அஜித் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் துவக்க விழாவும் வியாழக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு காரணமாக கூறப்படுவது அஜித் ஷீரடி சாய் பாபாவின் தீவிர பக்தர் என்பதால் சாய் பாபாவுக்கு மிகவும் உகந்த நாளான வியாழக்கிழமையை இதுபோன்ற சுப காரியங்களுக்காக தேர்வு செய்வது தான்! அஜித்தும், சிவாவும் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, தமன்னா ஆகியோர் பரிசீலனையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ‘வேதாளம்’ படத்தில் அஜித், சிவாவுடன் முதன் முதலாக இணைந்த அனிருத் தான் அஜித்தின் 57-ஆவது படத்திற்கும் இசை அமைக்கிறார் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகரான தயாரித்துள்ள தனுஷின் ‘தொடரி’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் தவிர எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் ஜோடியாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார் டி.ஜி.தியாகராஜன். இன்னும் பெயரிப்படாத இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அஜித்தின் 57-ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் டி.ஜி.தியாகராஜன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;