ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘இரு முகன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன. இப்படத்தின் கடைசி ஷெட்யூல் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக மிகப்பெரிய பிரம்மாண்ட செட் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்களாம். ஆரம்பத்தில் ‘இரு முகன்’ படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைய இருப்பதால், சுதந்திர தின வெளியீடாக கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இது ஒருபுறமிருக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் இன்னொரு படமான ‘கருடா’வின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் துவங்கும் எனத் தெரிகிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ திரு இயக்கும் ‘கருடா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டள்ள இப்படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட பாகிஸ்தானைப்போலவே ராஜஸ்தானில் உள்ள சில இடங்களில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். 2017ஆம் ஆண்டு பொங்கலுக்கு ‘கருடா’வை எப்படியும் களமிறக்கிட வேண்டும் என்ற முனைப்பில் பரபரப்பாக செயல்பட்டு வருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...