சூர்யாவின் அவதாரத்தைக் காண்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. முதல்முறையாக ‘24’ படத்திற்காக சூர்யா 3 வேடங்களை ஏற்றிருக்கிறார். இதுதவிர இப்படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.
உணர்ச்சிகரமான சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர்!
தமிழில் வெளியாகவிருக்கும் இரண்டாவது ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட கதை என்றாலும், ரசிகர்களுக்கு ஹாலிவுட் படம் பார்க்கும் அனுபவத்தைத் தரும் வகையில் ‘24‘ படத்திற்காக வித்தியாசமான திரைக்கதை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம்குமார். இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராக இருந்தாலும், நம்மூர் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் காதல், காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாகவே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 3 வேடங்கள் 5 கெட்அப்கள்
இதுவரை தனது கேரியரில் 6 முறை இரட்டை வேடங்களில் நடித்துள்ள சூர்யா, ‘24’ படத்திற்காக முதல்முறையாக 3 வேடங்களில் நடித்திருக்கிறார். மணி, சேதுராமன், ஆத்ரேயா எனும் மூன்று கேரக்டர்களில், ஆத்ரேயாவுக்காக மட்டுமே 3 தனி கெட்அப்களை உருவாக்கியிருக்கிறார்களாம். ஆக மொத்தம், சூர்யாவின் 5 வித்தியாசமான கெட்அப்களை தரிசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அதோடு முதல்முறையாக ‘வில்லாதி வில்லனா’கவும் தோன்றியிருக்கிறார் சூர்யா.
புதுமையும், இளமையும் கலந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
‘24’ படத்தில் விக்ரம்குமார் இயக்கம், சூர்யா ஹீரோ என்ற தகவல் வெளிவந்தபோது, அதற்கடுத்தபடியாக அறிவிக்கப்பட்ட முதல் நபர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தளவுக்கு இப்படத்தின் கதையை யோசிக்கும்போதே விக்ரம்குமாரின் ஒரே சாய்ஸாக ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே இருந்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இசையில் வெளிவந்திருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தவிர, படத்தின் பின்னணி இசைக்காக பெரிதாக மெனக்கெட்டிருக்கிறாராம் ஏ.ஆர்.ஆர். இளமையும், புதுமையும் கலந்த அவரின் பின்னணி இசைக்கோர்ப்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தளிக்கும் என்கிறார்கள்.
ரசிகர்களை வசீகரிக்கும் சமந்தா, நித்யாமேனன்
‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ‘24’ படத்திற்காக இணைந்திருக்கிறார் சமந்தா. அதோடு விக்ரம்குமாரின் சூப்பர்ஹிட் தெலுங்குப்படமான ‘மனம்’ படத்திலும் சமந்தாதான் நாயகி. நித்யாமேனனுக்கு சூர்யாவுடன் இது முதல்படம், ஆனால் விக்ரம்குமாருடன் அவர் இணையும் இரண்டாவது படம் ‘24’. சமந்தா, நித்யாமேனன் இருவருமே இயக்குனர் விக்ரம்குமாரின் நெருங்கிய தோழிகள் என்பது கூடுதல் தகவல். இந்த இரண்டு அழகிகளையும் கூடுதல் அழகோடு பிரதிபலித்திருக்கிறதாம் ‘திரு’வின் கேமரா கண்கள்.
உச்சபட்ச டெக்னிக்கல் விஷயங்கள்
ஏ.ஆர்.ரஹ்மானின் எனர்ஜியான இசை, திருவின் ‘டாப்நோட்ஜ்’ கேமரா, ‘மனம்’ பட எடிட்டர் பிரவீன் புடியின் ‘ஷார்ப் கட்’ஸ் என்பதோடு ‘24’ படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பங்களிப்பு மிகப்பெரிதாக இருக்குமாம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சின்னச்சின்ன விஷயங்களுக்காக சிஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். அதேபோல், 50% மேற்பட்ட முக்கிய காட்சிகளில் ‘விஎஃப்எக்ஸி’ன் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், எந்த இடத்திலும் ‘இது சிஜி’ என ரசிகர்கள் தரம் பிரிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்களாம். ‘24’ஐ பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் இதை நிச்சயம் உணர்வார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் விக்ரம்குமார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...